துக்ளக் பத்திரிகையின் பொன்விழா சிறப்புக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அந்த பத்திரிகையின் ஆசிரியர் குருமூர்த்தி, இரண்டாக பிரிந்திருந்த அதிமுகவை இணைத்ததில் தனக்கு பங்குண்டு. எனது அறிவுறுத்தலின் பேரில் ஜெயலலிதா நினைவிடத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தியானத்தில் அமர்ந்தார்.
இதனைத் தொடர்ந்தே கட்சியில் இணைப்பு ஏற்பட்டது என்று கூறினார். இது அதிமுகவிற்குள் புயலை கிளப்பியுள்ளது. இதுதொடர்பாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, இது திமிருவாதத்தின் உச்சம். ஆணவத்தின் உச்சம். நாவடக்கத்துடன் குருமூர்த்தி பேச வேண்டும் என்று அமைச்சர் எச்சரித்தார்.
நான் ஓபிஎஸ்ஸை அப்படி சொல்லவில்லை: குருமூர்த்தி தரக்குறைவாக பேசியது யாரை?
'துக்ளக்' இதழின் பொன் விழா திருச்சியில் நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய குருமூர்த்தி, “சசிகலா முதல்வர் ஆவதற்கான பணிகள் நடைபெற்று வந்தபோது, துணை முதல்வர் பன்னீர்செல்வம் என்னிடம் வந்து இப்படி எல்லாம் நடக்கிறது என்று சொன்னார். நான் அவர்களைப் பார்த்து, நீங்களெல்லாம் ஆம்பளையா எதுக்கு இருக்கீங்க என்று கேட்டேன், நான் கூறியதால்தான் பன்னீர்செல்வம், ஜெயலலிதா சமாதிக்குச் சென்று தியானம் செய்தார்” எனக் கூறினார்.
திமிருவாதத்தின் உச்சம் -துக்ளக் ஆசிரியரை கண்டித்த அமைச்சர், மகாராஷ்டிரா ஆளுநரை ஹோட்டலுக்கு அழைத்த சிவசேனா...இன்னும் பல முக்கிய செய்திகளின் தொகுப்பு