மல்லிப்பட்டிணத்தில் கடல் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் திறப்பு விழா

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம்மீன்பிடி துறைமுகத்தில் புதியதாக திறக்கப்பட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் அலுவலக கட்டிடத்தில் மீன்பிடி சட்ட அமலாக்கு பிரிவு அலுவலகம் இன்று(மார்ச் 4) திறக்கப்பட்டது.


இதில் தடைசெய்யப்பட்ட வலைகளான இரட்டை மடி வலை,சுறுக்கு வலை,கடல் வழியாக கடத்தலை தடுத்தல் போன்ற சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணிக்க இந்த அலுவலகம் இருக்கும் என்று அதிகாரிகள் கூறினர்.


மீன்வளத்துறை துணை கண்காணிப்பாளர், காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் கலந்துக்கொண்டு குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர்.இந்நிகழ்ச்சியில் மீனவ சங்கத்தினர்,படகு உரிமையாளர்கள் கலந்துக்கொண்டனர்.


Popular posts
மே.வங்கத்தில் குடியேறிய அத்தனை வங்கதேசத்தவரும் இந்திய குடிமக்களே- மமதா பானர்ஜி அதிரடி
கொரோனா நோயாளிகளை தவறுதலாக அனுப்பி வைத்த மருத்துவமனை
Image
இது தொடர்பாக சுகாதார செயலர் பீலா ராஜேஷ் கூறுகையில், விழுப்புரத்தில் கொரோனா பாதித்த 4 பேரும் அரசின் கண்காணிப்பில் உள்ளனர்
பெயர் வெளியிட விரும்பாத மற்றொரு அதிகாரி ஒருவர் கூறுகையில், விழுப்புரத்தில் தனிமை முகாமில் சிகிச்சை பெற்று வரும் கொரோனா நோயாளிகள் தொடர்பு கொண்ட நபர்கள் அரசின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்