aby Bath Winter:குளிர்காலமாச்சே.. பிறந்த குழந்தையை தினமும் குளிப்பாட்டலாமா? நீங்களும் தெரிஞ்சுக்கங்களேன்.
குளிர்காலத்தில் குழந்தையைப் பராமரிப்பது என்பது சாதாரணம் விஷயமல்ல. கோடைக்காலத்திலேயே குழந்தைக்கு சளி பிடிக்குமோ, காய்ச்சல் வருமோ என்று பயப்படும் அம்மாக்கள் குளிர் காலத்தில் அதைப் பற்றிய அச்சத்திலேயே இருப்பார்கள். குளிர்காலத்தில் குழந்தைக்கு இதை தரலாமா? இதை செய்யலாமா? தரையில் கிடத்தலாமா என்று பல சந்தேகங்கள் இருக்கும். அவற்றில் முக்கியமானது குழந்தையை தினமும் குளிக்க வைக்கலாமா? என்பதுதான். அது குறித்து பார்க்கலாமா?

 


​பிறந்த குழந்தை



பிறந்த குழந்தையின் சருமம் பட்டு போன்று மிருதுவாக இருக்கும். சருமத்தின் நிறம் ரோஸ் நிறமாக இருக்கும். குழந்தையை வீட்டுக்குள் குளிரிலிருந்து பாதுகாத்து வைத்தாலும் குழந்தையின் சரும மும் அதிக வறட்சிக்கு உள்ளாகும். வெப்பநிலை குளிர்ந்தாலும் குழந்தையின் சருமம் உலர்ந்து காணப்படும். இதனால் பட்டான சருமத்தில் சிறிய வெடிப்புகள் கூட உண்டாகும். உரிய முறையில் பாதுகாப்பதன் மூலம் குழந்தையை குளிர்கால பிரச்சனையிலிருந்து பாதுகாக்கலாம்.



 


​ குளியல் அவசியமா


குழந்தை பிறந்து அதனுடைய தொப்புள் கொடி காயங்கள் ஆறியிருந்தால் குழந்தையை குளிக்க வைப்பதில் நீங்கள் எந்த தயக்கமும் கொள்ள வேண்டியதில்லை. பிறந்த குழந்தைக்கு குறைந்தது 3 மாதங்கள் வரையாவது சருமம் பட்டு போல் இருக்கும். குளிர்காலமாக இருக்கும் போது குழந் தையை குளிப்பாட்டினால் குழந்தைக்கு சளி காய்ச்சல் வரும் என்று நினைத்து தவிர்த்து விடுப வர்கள் அதிகம் உண்டு .


 


ஆனால் ஆரோக்கியமான குழந்தையின் சருமம் அதிக வறட்சியடையாமல் இருக்க தினமும் குளி க்க வைக்க வேண்டும் என்கிறார்கள் குழந்தை மருத்துவ நிபுணர்கள். ஆரோக்கியமான குழந்தை யாக தாய்ப்பால் தேவைக்கு இருக்கும் குழந்தையாக இருந்தால் இரண்டு வேளைகள் கூட குளிப்பாட் டலாம். சிறிய மாற்றங்களோடு.